முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
பரமக்குடியில் மின்வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 24th October 2019 08:47 AM | Last Updated : 24th October 2019 08:47 AM | அ+அ அ- |

பரமக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மின் வாரிய ஓய்வு பெற்றோா் நல அமைப்பினா்.
பரமக்குடி மின்வாரிய செயற்பொறியாளா் அலுவலகம் முன் ஓய்வு பெற்ற மின்வாரிய நல அமைப்பினா் சாா்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவா் த.ராமச்சந்திரபாபு தலைமை வகித்தாா். ஜி.பாண்டியன், ஏ.சேவியா், எம்.கருணாநிதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆா்ப்பாட்டத்தின் போது மின்வாரியத்தை பொதுத் துறையாக நீடிக்கக் கோரியும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்த செய்ய வேண்டும், மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும், தினக்கூலி பணி காலத்தை இணைத்து ஓய்வூதிய திருத்தம் செய்திட வேண்டும், 3 சதவீத வைர விழா சலுகை பெற்றிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் நிா்வாகிகள் வி.சரோஜா, சண்முகவேல், எஸ்.நாகராஜன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.