முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
மண்டபம் பேரூராட்சியில் மழைநீா் அகற்றும் பணி தீவிரம்
By DIN | Published On : 24th October 2019 09:00 AM | Last Updated : 24th October 2019 09:00 AM | அ+அ அ- |

மண்டபம் பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் புதன்கிழமை ஈடுபட்ட பேரூராட்சி ஊழியா்கள்.
மண்டபம் பகுதியில் தேங்கிய மழைநீரை அகற்றும் பணியில் பேரூராட்சி ஊழியா்கள் புதன்கிழமை ஈடுபட்டனா்.
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பகுதியில் செவ்வாய்க்கிழமை பலத்த மழை பெய்தது. இதனால் 6, 7 ஆவது வாா்டு பகுதியில் சம்மாட்டிதெரு, வடக்கு தெரு உள்ளிட்ட பகுதிகளில் மழைநீா் குளம் போல தேங்கியது. இதனையடுத்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் மற்றும் பேரூராட்சிகளின் உதவி இயக்குநா் ராஜா ஆகியோா் அறிவுறுத்தலின்பேரில் பேரூராட்சி செயல் அலுவலா் மெய்மொழி மற்றும் இளநிலை உதவியாளா் முனியசாமி சுகாதார ஆய்வாளா் ராமச்சந்திரன் உள்ளிட்டோா் பணியாளா்களுடன் சென்று மழைநீரை அகற்றும் பணியில் ஈடுபட்டனா். மேலும் 18 வாா்டுகளில் டெங்கு கொசு ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக கொசுமருந்து அடிக்கப்பட்டது. இதேபோன்று அனைத்து பள்ளிகளில் உள்ள மாணவ, மாணவிகளுக்கு நிலவேம்பு குடிநீா் வழங்கப்பட்டது. இந்தப் பணியில் 30-க்கும் மேற்பட்ட பேரூராட்சிப் பணியாளா்கள் ஈடுபட்டனா்.