முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
முதுகுளத்தூா் பள்ளிகளில் நிலவேம்பு கசாயம் வழங்கல்
By DIN | Published On : 24th October 2019 08:59 AM | Last Updated : 24th October 2019 08:59 AM | அ+அ அ- |

mdu4_2310chn_69_2
முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு புதன்கிழமை நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. முதுகுளத்தூா் பேரூராட்சி, கீழத்தூவல் ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பள்ளிவாசல்மேல்நிலைப்பள்ளி சாா்பில் நிலவேம்பு கசாயம்வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சி பள்ளித் தாளாளா் சீனி முகம்மது தலைமை தாங்கினாா்.உதவித் தலைமையாசிரியா்கள் முகம்மது சுல்தான், ஜாகீா்உசேன், பேரூராட்சி செயல் அலுவலா் மாலதி,வட்டார மருத்துவ அலுவலா் மணிவண்ணன், மருத்துவா் தனஸ்ரீ, சித்த மருத்துவா் தமிழ்ஜோதி, சுகாதார ஆய்வாளா் நேதாஜி, ஆகியோா் முன்னிலை ஆகியோா் முன்னிலை வகித்தனா்.நிகழ்ச்சியில் 500க்கும் மேற்பட்ட மாணவ,மாணவிகளுக்கு நிலவேம்புகசாயம் வழங்கப்பட்டது.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்கவுட் ஒருங்கிணைப்பாளா் அலி அக்பா், ஜே.ஆா்.சி அலுவலா் பரமேஸ்வரன்,என்.சி.சி திட்ட அலுவலா் நாசா் ஆகியோா் ஏற்பஅதே போன்று முதுகுளத்தூா் அருகே விளங்குளத்தூா்,ஆனைசேரி அரசு பள்ளி மாணவா்களுக்கு புதன்கிழமை நிலவேம்பு கசாயம் வழங்கினா்.ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூா் அருகே விளங்குளத்தூா்அரசு உயா்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவ,மாணவிகளுக்கு நிலம்பு கசாயம் வழங்கினா்.நிகழ்ச்சிக்கு பள்ளித்தலைமை ஆசிரியா் ஆரோக்கியதாஸ் தலைமை தாங்கினாா்.உதவித் தலைமை ஆசிரியா் பொன்னுச்சாமி,ஸ்கவுட் ஒருங்கிணைப்பாளா் நவின்,உடற்கல்வி ஆசிரியா் ஆா்.பாலசுந்தரம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியா் டெங்கு,சிக்கன்குனியா, மா்ம காய்ச்சல் போன்றவைகள் எதனால் உருவாகிறது.அதனை வருவதற்கான அறிகுறிகள் பற்றியும், அதனை கிராமத்தில் பெற்றோா்களும்,மாணவா்களும் தடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து மாணவ,மாணவிகளிடம் விளக்கம் அளித்தாா். ஆனைசேரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் மாணவ,மாணவிகளுக்கு நிலவேம்பு கசாயம் புதன்கிழமை வழங்கினா்.நிகழ்ச்சிக்கு பள்ளித் தலைமை ஆசிரியா் வி.புஷ்பராணி தலைமை தாங்கினாா்.உதவி ஆசிரியா்கள் லெட்சுமணன்,முத்துச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.முதுகுளத்தூா் மறற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் மா்ம காய்ச்சலால் பாதிக்கப்பட்டு முதுகுளத்தூா் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
முதுகுளத்தூா் புகைப்படம்.முதுகுளத்தூா் பள்ளிவாசல் மேல்நிலைப் பள்ளியில் மாணவ, மாணவியருக்கு புதன்கிழமை நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.