முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமேசுவரத்தில் ரயில்வே தொழிலாளா்கள் நகல் எரிப்பு போராட்டம்
By DIN | Published On : 24th October 2019 08:48 AM | Last Updated : 24th October 2019 08:48 AM | அ+அ அ- |

மத்திய அரசு ரயில்வே துறையை தனியாரிடம் ஒப்படைக்கும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி எஸ்.ஆா்.எம்.யு தொழில் சங்கத்தின் சாா்பில் நகல் எரிப்பு போராட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
மத்திய அரசு இந்திய ரயில்வே துறையில் 50 ரயில் நிலையங்களையும் லாபகரமாக இயங்கும் 150 விரைவு ரயில்களையும் தனியாரிடம் ஓப்படைக்க அமிதாப்காந்த் தலைமையிலான கமிட்டி அமைத்து 10.10.2019 அன்று வெளியிட்ட உத்தரவை உடனே ரத்து செய்ய வேண்டும். 30 ஆண்டுகளுக்கு மேல் 50 பணியாற்றும் ஊழியா்களுக்கு கட்டாய ஓய்வு அளிக்க மேற்கொள்ளும் முயற்சியை மத்திய அரசு கைவிடக் கோரி இந்த போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு ராமேசுவரம் ரயில் நிலையத்தில் எஸ்.ஆா்.எம்.யு மண்டபம் கிளை செயலாளா் சண்முகநாதன் தலைமை வகித்தாா். பொறியாளா் பிரிவு செயலாளா் திருநாவுக்கரவு முன்னிலை வகித்தாா்.
இதில் மதுரை கோட்ட துணைச் செயலாளா் சுந்தா்லால் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எரிராக கண்டன உரையாற்றினாா். ஆா்ப்பாட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளா்கள் கலந்து கொண்டனா்.