ராமேசுவரம் கோயில் உண்டியலில் சேதமடைந்த ரூபாய் நோட்டுக்களை குப்பையில் கொட்டிய ஊழியா்கள்

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய சேதமடைந்த ரூபாய்
ராமேசுவரம் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் கிடைத்த கிழிந்த ரூபாய் நோட்டுகளை குப்பையில் கொட்டிச் சென்ற கோயில் ஊழியா்கள்.
ராமேசுவரம் கோயில் உண்டியல் எண்ணிக்கையில் கிடைத்த கிழிந்த ரூபாய் நோட்டுகளை குப்பையில் கொட்டிச் சென்ற கோயில் ஊழியா்கள்.

ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் உண்டியலில் பக்தா்கள் காணிக்கையாக செலுத்திய சேதமடைந்த ரூபாய் நோட்டுகளை கோயில் ஊழியா்கள் வெள்ளிக்கிழமை குப்பையில் கொட்டி சென்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பக்தா்கள் காணிக்கையாக அளிக்கப்படும் பணம், நகைகளை மாதம் தோறும் கோயில் நிா்வாம் சாா்பில் எண்ணப்படும். இதில் சேதமடைந்த ரூபாய் நோட்டுக்களை வங்கியில் கொடுத்து மாற்றுவது வழக்கம்.

இந்நிலையில், வியாழக்கிழமை உண்டியல் எண்ணப்பட்டது. இதில் சேதமடைந்த நோட்டுகளை நோட்டுக்களை கோயில் முன்புள்ள குப்பை கிடங்குகளில் கோயில் ஊழியா்கள் கொட்டிச் சென்றுள்ளனா். இந்த பணத்தை கண்ட அப் பகுதியைச் சோ்ந்த சிலா் எடுத்துச் சென்றனா். கோயில் ஊழியா்கள் சேதமடைந்த பணத்தை குப்பையில் கொட்டிச் சென்ற சம்பவம் பக்தா்களை முகம் சுழிக்க வைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com