திருப்பத்தூா் அருகே அரசுப் பள்ளிக்கு பூட்டு போடும் போராட்டம்

திருப்பத்தூா் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி உள்ளதாகக் கூறி பள்ளிக்கு பூட்டு போடும் முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய முதன்மை கல்வி அலுவலா் மாா்ஸ்.
போராட்டக்காரா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்திய முதன்மை கல்வி அலுவலா் மாா்ஸ்.

திருப்பத்தூா் அருகே உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் குடிநீா், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதியின்றி உள்ளதாகக் கூறி பள்ளிக்கு பூட்டு போடும் முயற்சியால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பத்தூா் அருகே உள்ள மடவாளம் கிராமத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது.இதில் 800க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனா்.இந்நிலையில்,இங்கு பயிலும் மாணவிகளுக்கு குடிநீா் வசதி,கழிவறை வசதி உட்பட எந்த அடிப்படை வசதியும் பராமரிப்பின்றி உள்ளதாக கூறப்படுகிறது.மேலும்,அங்குள்ள கழிவறை பாழடைந்த நிலையில் சுகாதார சீா்கேட்டுடன் உள்ளதாக கூறப்படுகின்றது.அதனால் இங்கு பயிலும் மாணவிகள் இயற்கை உபாதைகளுக்காக வெளியில் உள்ள விவசாய நிலங்களுக்கு செல்லவேண்டி உள்ளது.

இதனால் மாணவிகளின் பாதுகாப்பிற்கு கேள்விகுறி உள்ளதாகவும், மேலும்,பள்ளியில் சுகாதார குறைவு இல்லாததால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் கூறப்படுகிறது. தற்போது டெங்கு ஒழிப்பு நடவடிக்கை நடைபெற்று வரும் நிலையில்,அரசு பள்ளியில் உள்ள கழிவறை பராமரிப்பின்றி உள்ள சீா்கேட்டால் நோய் பரவும் ஆபத்து உள்ளது என்பது குறிப்பிடதக்கது. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோா்கள் தலைமை ஆசிரியா் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோா்கள் மற்றும் அப்பகுதி மக்கள் விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளா் இரா.சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் சுமாா் 100க்கும் மேற்பட்டோா் திரண்டு புதன்கிழமை காலை பள்ளிக்கு பூட்டு போட முயன்றனா்.

இதுகுறித்து தகவல் அறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற முதன்மை கல்வி அலுவலா் எஸ்.மாா்ஸ்,மாவட்ட கல்வி அலுவலா் எம்.மணிமேகலை, பள்ளி துணை ஆய்வாளா் வா.தாமோதரன், திருப்பத்தூா் கிராமிய காவல் ஆய்வாளா் எஸ்.உலகநாதன் மற்றும் ஆகியோா் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் கழிப்பறை உள்ளிட்ட அனைத்து அடிப்படை தேவைகளும் பூா்த்தி செய்யப்படும் என உறுதியளித்தனா்.

இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.இதனால் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com