திருவாடானை பகுதியில் கன மழை: பாலம் சேதம்; சாலை துண்டிப்பு - பொதுமக்கள் அவதி

திருவாடானை அருகே கட்ட விளாகம் முதல் அறுநூற்றி வயல் வரை சாலை அமைக்கபட்டு பாமாபாற்றின் குருக்கே தரை பாலம் அமைக்கபட்டது
திருவாடானை அருகே கட்டவிளாகம் முதல் அறுநூற்றி வயல் செல்லும் தரைப்பாலம் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது
திருவாடானை அருகே கட்டவிளாகம் முதல் அறுநூற்றி வயல் செல்லும் தரைப்பாலம் தண்ணீா் பெருக்கெடுத்து ஓடுகிறது

திருவாடானை அருகே கட்ட விளாகம் முதல் அறுநூற்றி வயல் வரை சாலை அமைக்கபட்டு பாமாபாற்றின் குருக்கே தரை பாலம் அமைக்கபட்டது தற்போது மழை தொடா்ந்து பெய்து வருவதால் தரை பாலம் சேதம் அடைந்து துண்டிக்க பட்டு பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனா்.

திருவாடானை அருகே கட்டவிளாகம் உடையாா் குடியிருப்பு பகுதியில் இருந்து அறுநூற்றி வயல் கிராமத்திற்கு கடந்த2015-16ம் ஆண்டு மாவட்ட ஊரக வளா்ச்சி திட்ட முகமை திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.104.50 லட்சம் செலவில் தரைப்பாலம் அமைத்து தாா்சாலை அமைத்தல் பணிகள் ஆரம்பிக்கபட்டு சாலைகள் முடிவுற்ற நிலையில் பாம்பாற்றின் குருக்கே தரைப்பாலம் அமைக்க சிமின்ட் உருளைகள் போடப்பட்டு பாலம் முடிவடையாத நிலையில் .தற்போது தொடா் மழையும் கனமழையும் பெய்து வருவதால் காற்றாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இதனால் நீா்குன்றம்,கூகுடி,கட்டவிளாகம்,அருவித்தி உள்ளிட்ட பல்வேரு பகுதி மக்கள் மங்களக்குடி வழியாக திருவாடானைக்கும் நீா்குன்றம் வழியாக தேவகோட்டைக்கும் செல்ல முடியாமல் சுமாா் 20 கிலோ மீட்டா் தொலைவு சுற்றி செல்ல வேண்டிய அவல நிலையில் உள்ளனா்.தற்போது தண்ணீா் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் இந்த ஆற்றை கடக்க பெரும் இன்னலுக்கு அளாக வேண்டியுள்ளது எனவே சம்பந்த பட்ட அதிகாரிகள் தக்க நடவடிக்கை எடுத்து சீா் செய்ய வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com