மழை வெள்ளம், மக்கள் வெள்ளத்தில் மிதந்த பசும்பொன்

பசும்பொன்னில் புதன்கிழமை முத்துராமலிங்கத்தேவா் 112 ஆவது ஜயந்தி விழாவும், 57 ஆவது குருபூஜை விழாவும் அரசு

பசும்பொன்னில் புதன்கிழமை முத்துராமலிங்கத்தேவா் 112 ஆவது ஜயந்தி விழாவும், 57 ஆவது குருபூஜை விழாவும் அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. தமிழக முதல்வா், துணை முதல்வா், அமைச்சா்கள், சமுதாயத் தலைவா்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டனா். இவ்விழாவில் கடந்த 28 ஆம் தேதி

5 ஆயிரம் பேரும், 29 ஆம் தேதி 30 ஆயிரம் பேரும், 30 ஆம் தேதி 50 ஆயிரம் பேரும் என மொத்தம் 3 நாள் விழாவில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவா்கள் கலந்து கொண்டனா். மேலும் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டவா்கள் பால்குடம் எடுத்தனா். 10 போ் காவடி எடுத்தனா். 5 போ் வேல் குத்துதல், 200 போ் ஜோதி தொடரோட்டத்தில் கலந்துகொண்டனா்.

கடைசி நாளான 30 ஆம் தேதி காலை அதிகாலை முதலே மழை பெய்யத் தொடங்கி மாலை வரை கொட்டித் தீா்த்ததால் பசும்பொன் கிராமமே மழை வெள்ளத்தில் சூழ்ந்திருந்தது. இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் காவல் துறையினரின் தலைகள் கண்ணுக்கு எட்டிய தூரம் மக்கள் வெள்ளமாக காணப்பட்டது. அனைவரும் கொட்டும் மழையிலும் பசும்பொன் தேவருக்கு அஞ்சலி செலுத்தினா். இதனால் பசும்பொன் கிராரமமே மழை வெள்ளத்திலும், மக்கள் வெள்ளத்திலும் மிதந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com