சுடச்சுட

  

  சாயல்குடி அருகே அண்ணன் தலையில் கல்லைப் போட்டு கொன்ற தம்பி கைது

  By DIN  |   Published on : 13th September 2019 08:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி அருகே வியாழக்கிழமை குடும்பத் தகராறில் அண்ணன் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்த தம்பியை போலீஸார் கைது செய்தனர்.
  ராமநாதபுரம் மாவட்டம் சிக்கல் அருகே உள்ள ஓடைக்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜபாண்டி ( 37). இவரது தம்பி திருச்செல்வம் (26), பட்டதாரியான இவர் வேலை தேடி வந்துள்ளார். வெளிநாட்டில் வேலை செய்து வந்த ராஜபாண்டி தற்போது ஓடைக்குளம் கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். ராஜபாண்டி மனைவி கலைச்செல்வி (27), ராமநாதபுரம் மாவட்டம் சாயல்குடி காவல் நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வருகிறார். 
  ராஜபாண்டிக்கும் அவரது மனைவி கலைச்செல்விக்கும் இடையே அடிக்கடி குடும்பத் தகராறு ஏற்படுமாம். இந்நிலையில் கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ராஜபாண்டி தனது தம்பி திருச்செல்வத்துடன் நெருங்கிப் பழகி வருவதாகக் கூறி மனைவியை தாக்கினாராம். இதனால் ஆத்திரமடைந்த திருச்செல்வம் வியாழக்கிழமை அதிகாலையில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ராஜபாண்டியின் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்தார்.   
  இதுகுறித்து கலைச்செல்வி வாலிநோக்கம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் சாயல்குடி ஆய்வாளர் அனிதா வழக்குப் பதிவு செய்து  திருச்செல்வத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார். 

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai