சுடச்சுட

  

  முதுகுளத்தூர் அருகே நல்லூர் கிராமத்தில் ஸ்ரீ அய்யனார் கோயில், ஸ்ரீ பேச்சியம்மன் கோயில் புரவி எடுப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.
  இதனைத் தொடர்ந்து  மேலக்கன்னிசேரியில் பிடிமண் எடுத்து ஒரு மாத காலம் விரதம் இருந்து மண் குதிரைகள் செய்து அவைகளுக்கு வர்ணம் பூசி , அய்யனார் குதிரை மேல் ஏறி நிற்பது போன்ற சிலைகளும், தவளும் குழந்தைகள் உருவத்தையும் தயார் செய்து கிராம இளைஞர்கள் சுமந்து கொண்டு ஊர்வலமாக எடுத்து வந்தனர். 
  பின்னர் அவற்றை நல்லூர் கிராமத்தில் உள்ள ஸ்ரீ அய்யனார் கோயில் தளத்தில் வைத்து வழிபட்டனர். விழாவை முன்னிட்டு  கிராம மக்கள் அய்யனார் கோயிலுக்கு பொங்கல் வைத்து பல்வேறு அபிஷேகங்கள்  மற்றும்  திருவிளக்கு, மாவிளக்கு பூஜைகள் செய்தனர்.
  விழாவினை தொடர்ந்து சுதந்திரப் போராட்ட நாடகங்கள், அன்னதானம் போன்ற நிகழ்ச்சிகள் தொடர்ந்து 3 நாள்கள்  நடைபெற்றன. விழாவுக்கான ஏற்பாடுகளை கிராம இளைஞர்களும்,பெரியோர்களும் செய்திருந்தனர்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai