சுடச்சுட

  

  பிரதமரின் இலவச வீடு திட்டம் விண்ணப்பிக்க இன்று கடைசி

  By DIN  |   Published on : 13th September 2019 08:59 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பாரத பிரதமரின் இலவச வீடு திட்டத்தில் பயன்பெற இன்றே கடைசி நாள் (செப். 13) என கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.
   ஊராட்சிகளில் உள்ளூரில் வசிப்போர்களுக்கு மட்டுமே, உரிய நிலங்கள், ஆதார், குடும்ப அட்டை, வங்கிக் கணக்குகள் இருந்தால், பாரதப் பிரதமரின் இலவச வீடு பெறும் திட்டத்தில் பயனாளிகள் பயன்பெற முடியும். இதற்கான அறிவிப்பு, ஆகஸ்ட் 15 இல், நடந்த கிராம சபைக் கூட்டத்திலும், ஊராட்சிகளில் அறிவிப்புகள் மூலமாகவும் பொதுமக்களுக்கு தெரியபடுத்தப்பட்டது. மேலும் இத்திட்டம் குறித்து, கிராம மக்கள் அறியாத நிலை உள்ளதால், துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலமாக 15 நாள்களாக, கிராமங்கள்தோறும் விழிப்புணர்வு, பயனாளிகள் பட்டியல் சேகரிக்கும் பணி தீவிரபடுத்தபட்டுள்ளது. 
  இத்திட்டத்தில் பயன்பெற செப்.13 கடைசிநாளாக இருப்பதால், வீடு இல்லாத நிலம் உள்ள, உள்ளூரில் வசிப்போர்கள், தங்களது காலியான நில ஆவணம், ஆதார், குடும்ப அட்டை, வங்கி பாஸ் புத்தக நகல்களுடன் சம்பந்தப்பட்ட ஊராட்சி செயலரை அணுகி, இலவச வீடு பெறும் திட்டத்தில் பயனாளிகளாக பயன்பெறலாம் என, கமுதி ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் ரமேஷ்குமார் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai