பரமக்குடி அருகே கிராமச்சாலை தரமின்றி அமைக்கப்படுவதாக புகார்

பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் வேந்தோணி ஊராட்சியில் கிராமச் சாலை தரமில்லாத வகையில் அமைக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.

பரமக்குடி ஊராட்சி ஒன்றியம் வேந்தோணி ஊராட்சியில் கிராமச் சாலை தரமில்லாத வகையில் அமைக்கப்பட்டு வருவதாக கிராம மக்கள் புகார் தெரிவித்தனர்.
வேந்தோணி ஊராட்சியில் முத்துச்செல்லாபுரம் செல்லும் விலக்குச்சாலை மிகவும் சேதமடைந்து காணப்பட்ட நிலையில், தற்போது 900 மீட்டர் நீளத்திற்கு புதிதாக சாலை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இச்சாலையானது அரசின் திட்ட மதிப்பீட்டின்படி அமைக்காமல் போதிய ஜல்லி, தார் கலவையின்றி தரமற்றதாக அமைக்கப்பட்டு வருவதாக புகார் எழுந்துள்ளது.
இது குறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளரிடம் பல முறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். 
 கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் ஒதுக்கப்படும் நிதியானது முறையாக கிராம மக்களைச் சென்றடையும் வகையில் சாலைப் பணிகள் முறையாக நடைபெற மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com