Enable Javscript for better performance
முதுகுளத்தூர் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்- Dinamani

சுடச்சுட

    

    முதுகுளத்தூர் அருகே மாட்டு வண்டிப் பந்தயம்

    By DIN  |   Published on : 14th September 2019 06:01 AM  |   அ+அ அ-   |    |  

    முதுகுளத்தூர் அருகே நல்லூர் கிராமத்தில் அமைந்துள்ள பேச்சியம்மன் கோயில் புரவி எடுப்பு திருவிழாவை முன்னிட்டு, மாட்டு வண்டிப் பந்தயம் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்டது.
    இக்கோயிலில் புரவி எடுப்பு திருவிழாவைத் தொடர்ந்து, மண் குதிரைகளுக்கு வர்ணம் பூசி, மேலக்கன்னிசேரியில் பிடிமண் எடுத்து தயார் செய்யப்பட்டு, குதிரை, தவளும் குழந்தைகள் உருவத்தை கிராம மக்கள் ஊர்வலமாக எடுத்துவந்து கோயிலில் வைத்து வழிப்பட்டனர். 
    அதையடுத்து, கிராம மக்கள் அம்மனுக்கு கோயிலில் பொங்கல் வைத்து வழிபட்டனர். புரவி எடுப்பு விழாவை முன்னிட்டு, இரு பிரிவுகளாக இரட்டை மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. 
    பெரிய மாட்டு வண்டிப் பந்தயத்துக்கு நல்லூரிலிருந்து முதுகுளத்தூர் வரை 8 மைல் தொலைவு எல்லையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், திணையார்குடி ஆர்.கே. சிவா மாடு முதல் பரிசையும், மருங்கூர் இ.எம்.எஸ். முகம்மது மாடு இரண்டாம் பரிசையும், சிவகங்கை மாவட்டம்  மல்லம்பட்டி காயத்ரி மாடு மூன்றாம் பரிசையும் வென்றன. 
    சின்ன மாட்டு வண்டிப் பந்தயத்துக்கு நல்லூரிலிருந்து செல்வநாயகபுரம் வரை 5 மைல் தொலைவு எல்கையாக நிர்ணயம் செய்யப்பட்டது. இதில், பி.உசிலங்குளம் கருப்புத்துரை பாண்டியன் மாடு முதல் பரிசையும், சிங்கிலிபட்டி முருகபாண்டி மாடு இரண்டாம் பரிசையும், திருச்சி கம்பம் செல்லாயி அம்மாள், வெள்ளந்தாங்கி செந்தில் சகோதரர்கள் ஆகிய இருவருடைய மாடுகள் மூன்றாம் பரிசையும் வென்றன. 
    இப்போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாடுகளின் உரிமையாளர்களுக்கு ரொக்கப் பரிசும், குத்துவிளக்கும் வழங்கப்பட்டது. மாட்டு வண்டி பந்தயத்தினை, சுற்றுவட்டாரக் கிராம மக்கள் ஏராளமானோர் கண்டு மகிழ்ந்தனர். 
    நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை, நல்லூர் கிராம கோயில் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.

    kattana sevai