Enable Javscript for better performance
முதுகுளத்தூர் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு- Dinamani

சுடச்சுட

    

    முதுகுளத்தூர் அருகே மூதாட்டியிடம் 5 பவுன் நகை பறிப்பு

    By DIN  |   Published on : 14th September 2019 06:01 AM  |   அ+அ அ-   |    |  

    முதுகுளத்தூர் அருகே மூதாட்டியிடமிருந்து 5 பவுன் சங்கிலியை பறித்துச் சென்ற மர்ம நபர் மீது, போலீஸார் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்துள்ளனர். 
    ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே மேலச்சிறுபோது கிராமத்தைச் சேர்ந்த  திருநாகலிங்கம் மனைவி வீரமாகாளி (60). இவர் தனது வீட்டுக்கு வெளியே தூங்கிக் கொண்டிருந்தபோது, அவர் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை மர்ம நபர் பறித்துக்கொண்டு தப்பியோடிவிட்டார். இது குறித்து இளஞ்செம்பூர் காவல் நிலையத்தில் வீரமாகாளி அளித்த புகாரின்பேரில், சார்பு-ஆய்வாளர் திருநாகநாதன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறார்.
     

    kattana sevai