Enable Javscript for better performance
"முன்னாள் படை வீரர்களின் வாரிசுதாரர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'- Dinamani

சுடச்சுட

    

    "முன்னாள் படை வீரர்களின் வாரிசுதாரர்கள் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்'

    By DIN  |   Published on : 14th September 2019 06:04 AM  |   அ+அ அ-   |    |  

    முன்னாள் படைவீரர்களின் வாரிசுதாரர்கள் உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி உதவித்தொகை பெறுவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தெரிவித்துள்ளார். 
      இது குறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தொழிற்கல்வி பயில கல்லூரிகளில் சேர்ந்துள்ள முதல் ஆண்டு பயிலும் முன்னாள் படைவீரர்களின் மகன், மகளுக்கு பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக பூர்த்தி செய்து உரிய இணைப்புகளுடன் விண்ணப்பிக்கலாம்.
     நடப்பு ஆண்டில் பாரத பிரதமரின் கல்வி உதவித்தொகை உயர்த்தப்பட்டு முன்னாள் படை வீரர்களின் பெண் வாரிசுகளுக்கு மாதம் ரூ.3 ஆயிரம், ஆண் வாரிசுகளுக்கு மாதம் ரூ.2,500 என வழங்கப்படுகிறது. இந்த அறிவிப்பு நடப்பு  ஆண்டில் முதலாம் ஆண்டு தொழிற்கல்வி பயிலும் முன்னாள் படைவீரர்களின் வாரிசுகளுக்கு மட்டுமே பொருந்தும்.  இணையதள மூலம் விண்ணப்பிக்க விரும்புவோர் வரும் நவம்பர் 15 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவேண்டும்.  
     இளநிலை படை அலுவலர்கள் மற்றும் இதர தகுதியுடைய முன்னாள் படைவீரர் வாரிசுகளுக்கு தொழிற்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, தொழிற்பயிற்சி கல்வி மற்றும் கலை, அறிவியல் கல்விகளுக்கு தொகுப்பு நிதியிலிருந்து கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.  மேலும் விபரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர்கள் நல துணை இயக்குநர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
     

    kattana sevai