பார்த்திபனூரில் 939 பயனாளிகளுக்கு ரூ.10.58 கோடியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல்

ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் தனியார் மண்டபத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 939 பயனாளிகளுக்கு ரூ .10.58 கோடி நலத் திட்ட உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர்


ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூர் தனியார் மண்டபத்தில் கூட்டுறவுத் துறை சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற விழாவில் 939 பயனாளிகளுக்கு ரூ .10.58 கோடி நலத் திட்ட உதவிகளை கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜு வழங்கினார். 
ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையின் பல்பொருள் விற்பனை அங்காடி, சவேரியார்பட்டினம் மற்றும் மேல்மங்களம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களின் சொந்த அலுவலக கட்டடங்கள் மற்றும் 14 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்கும் நிகழ்ச்சி பார்த்திபனூரில் நடைபெற்றது. 
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவராவ் தலைமை வகித்தார். மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் எம்.ஏ.முனியசாமி, பரமக்குடி பிசிஎம்எஸ். தலைவர் எம்.கே.ஜமால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
 விழாவில் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கலந்து கொண்டு பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கி பேசியது: 
மாநிலம் முழுவதும் திறக்கப்பட்டுள்ள 103 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் மக்களின் வரவேற்பை பெற்றுள்ளது. இதனை விரிவுபடுத்தும் விதமாக,  2-வது கட்டமாக 582 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் ரூ 5.82 கோடி மதிப்பீட்டில் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. 
இதில், 64 அம்மா சிறு கூட்டுறவு சிறப்பங்காடிகள் திறக்கப்பட்டுள்ளன. ராமநாதபுரம் மாவட்டத்தில் இதன் மூலம் ரூ.4 லட்சம் அளவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. 
சிறப்பங்காடிகள் மூலம் வீட்டுக்கு தேவையான 300 வகையான பொருள்கள் அதிக பட்ச சில்லறை விலையிலிருந்து 5 சதவீதம் வரை குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும். 
 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மூலம் கேசிசி பயிர்க் கடன் 60 நபர்களுக்கு ரூ .30 லட்சம், 100 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ .441 லட்சம் கடன், மத்திய காலக் கடன் 115 நபர்களுக்கு ரூ .108 லட்சம், மாற்றுத் திறனாளி கடன் 51 நபர்களுக்கு ரூ. 22 லட்சம், வீட்டு வசதிக் கடன், வீட்டு அடமானக் கடன் 31 நபர்களுக்கு ரூ .132 லட்சம் என 3,176 நபர்களுக்கு ரூ. 1,434 லட்சம் அளவிற்கு கடன்களும் வழங்கப்பட்டுள்ளன என்றார். 
முன்னதாக கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் கு.கோவிந்தராஜ் வரவேற்றார். விழாவில் கூட்டுறவுத் துறை அலுவலர்கள், பயனாளிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com