ராமநாதபுரத்தில் பெண்கள் விழிப்புணர்வு கார் பேரணி

ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் அனாதை இல்லா இந்தியாவை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி  பெண்கள் பங்கேற்ற கார் விழிப்புணர்வு


ராமநாதபுரம் இன்னர் வீல் சங்கம் சார்பில் அனாதை இல்லா இந்தியாவை உருவாக்குவோம் என்பதை வலியுறுத்தி  பெண்கள் பங்கேற்ற கார் விழிப்புணர்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சர்வதேச சுழற் சங்கத்தின் மகளிர் அமைப்பான இன்னர் வீல் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் அனாதை இல்லா இந்தியாவை உருவாக்குவோம், பெண்மையை போற்றுவோம், முதியோரை காப்போம் என்பதை மக்களிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்தும் விதமாக பெண்கள் பங்கேற்ற கார் பேரணியை மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தொடங்கி வைத்தார். இன்னர் வீல் சங்க மாவட்டத் தலைவர்  லட்சுமிவர்த்தினி ராஜேஸ்வரன் தலைமை வகித்தார். தலைவர்  கவிதா செந்தில் குமார் முன்னிலை வகித்தார்.  செயலாளர் கிருத்திக் ரகுநாத் வரவேற்றார். 
ராமநாதபுரம் அரண்மனை பகுதியில் தொடங்கிய விழிப்புணர்வு பேரணி பாம்பன் பாலம், தங்கச்சிமடம் , ராமேசுவரம் வழியாக தனுஷ்கோடி சென்றது. அங்கு பொது மக்களிடம்  விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய  துண்டு பிரசுரங்களை வழங்கினர். 
இதில் மருத்துவர்கள் மதுரம் அரவிந்தராஜ், கனகபிரியா பால்ராஜ், கவிதா லோகநாதன்,  கீதா ரமேஷ், பிரதா சிவகுமார், செல்விநாகரத்தினம் , சகீலா ரஜினி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com