ராமேசுவரத்தில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய் உடைப்பு: பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீண்

ராமேசுவரத்திற்கு வரும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர், கழிவு நீர் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடி புதன்கிழமை வீணானது.    

ராமேசுவரத்திற்கு வரும் காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்ட குழாய் உடைந்து பல ஆயிரம் லிட்டர் குடிநீர், கழிவு நீர் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடி புதன்கிழமை வீணானது.    
 ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் தீவுப்பகுதியின் குடிநீர் தேவையில் 65 சதவீதம் குடிநீர் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டத்தின் மூலம் பெறப்படுகிறது. மீதமுள்ள 35 சதவீதம் தண்ணீர்  தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பெறப்படுகிறது. நகராட்சி மூலம் நான்கு நாள்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. பெரும்பாலும் குடிநீர் தேவையை தனியார் டேங்கர் லாரிகள் மூலம் பொதுமக்கள் பெற்று வருகின்றனர்.
 இந்நிலையில், திங்கள்கிழமை காவிரி கூட்டுகுடிநீர் திட்ட குழாயில்  திட்டகுடி சந்திப்பு பகுதியில் உடைப்பு எற்பட்டு பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாக கழிவு நீர் கால்வாயில் பெருக்கெடுத்து ஓடியது. சுமார் ஒரு மணி நேரத்திற்கு பின்னரே தண்ணீர் நிறுத்தப்பட்டது. குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் காவிரி கூட்டுகுடிநீர் திட்ட பரமரிப்பு பணிகளை மேற்கொள்ளாததால்  தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குழாய் உடைந்து தண்ணீர் சாலைகள், தெருக்களில் பெருக்கெடுத்து ஓடும் நிலை ஏற்படுகிறது. பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் விநியோகம் செய்ய முடியாத நிலையில் அதிகாரிகள் அலட்சியத்தால் குடிநீர் வீணாகி வருவது  பெண்களிடையே மன வேதனையை ஏற்படுத்தி உள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com