தென்னை வெல்லம் தயாரிக்க விவசாயிகளுக்குப் பயிற்சி

ராமநாதபுரம்  தெற்குத்தரவையில் தென்னையில் இருந்து வெல்லம் தயாரித்தல்  குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  

ராமநாதபுரம்  தெற்குத்தரவையில் தென்னையில் இருந்து வெல்லம் தயாரித்தல்  குறித்த விவசாயிகளுக்கான பயிற்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.  
பயிற்சி தொடக்க நிகழ்ச்சிக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் எல்.சொர்ணமாணிக்கம் தலைமை வகித்தார். ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) எஸ்.எஸ்.சேக் அப்துல்லா  கூட்டுப்பண்ணையம் மூலம் நெல், பயறு வகைகள், காய்கறி பயிர்கள், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழில்களை வணிக நோக்கத்துடன் செய்து அதிக லாபம் பெறுவது குறித்து பேசினார். 
பரமக்குடிஉழவர் பயிற்சி நிலைய துணை இயக்குநர் பி.ஜி.நாகராஜன், தென்னை விவசாயத்தில் லாபம் ஈட்டுவது குறித்து விளக்கினார். ராமநாதபுரம் உயிர் உர உற்பத்தி மைய வேளாண்மை அலுவலர் உ.அம்பேத்குமார் உள்ளிட்டோர் பேசினர். 
பயிற்சிக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் த.சுபாஷ் சந்திரபோஸ், ஜெ. சேகர் ஆகியோர் செய்திருந்தனர். 
ராமநாதபுரம் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் எம். கோபாலகிருஷ்ணன் வரவேற்றார்.  ராமநாதபுரம் வட்டார தொழில்நுட்ப மேலாளர் ப. கோசலாதேவி நன்றிகூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com