Enable Javscript for better performance
கமுதி பெரிய கண்மாய் மடைகள் தூர்ந்து போனதால் ஊருணிக்கு தண்ணீர் வரத்து தடை- Dinamani

சுடச்சுட

    

    கமுதி பெரிய கண்மாய் மடைகள் தூர்ந்து போனதால் ஊருணிக்கு தண்ணீர் வரத்து தடை

    By DIN  |   Published on : 25th September 2019 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கமுதி பெரிய கண்மாயிலிருந்து செட்டி ஊருணிக்கு மழை நீர் வரும் மடைகள் தூர்ந்துபோய், மணல் மேடாக மாறியுள்ளதால், பலத்த மழை பெய்தும் ஊருணிக்கு தண்ணீர் வரத்து இல்லை என புகார் கூறப்பட்டுள்ளது.
    கமுதி நகரின் மையப் பகுதியில் பொதுமக்களின குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், 80 ஏக்கர் பரப்பளவில் செட்டி ஊருணி அமைந்துள்ளது. இந்த ஊருணியில் பொதுமக்கள் தண்ணீர் எடுக்கும் வகையில், கரையில் 100 அடி ஆழத்துக்கு 2 பெரிய கிணறுகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த கிணறுகள், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்து வந்தன. நாளடைவில், பெரிய கணமாயிலிருந்து செட்டி ஊருணிக்கு தண்ணீர் வரும் கால்வாய்கள் ஆக்கிரமிக்கப்பட்டு, நீர் வழித்தடங்கள் மறைந்துவிட்டன. மேலும், நீர் வரும் கால்வாய்களில் வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரை கலப்பதாகவும் புகார் கூறப்படுகிறது. பருவமழை தொடங்கியதால், பேரூராட்சி சார்பில் செட்டி ஊருணி தூர்வாரப்பட்டு தயார் நிலையில் இருந்தும், மழை நீர் வரும் வழித்தடங்கள் தடை பட்டுள்ளதால் ஊருணிக்கு தண்ணீர் வரத்து இல்லை. இதனால், பொதுமக்கள், விவசா யிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். கமுதி பெரிய கண்மாயிலிருந்து மழை நீர் செல்லும் 5 பெரிய மடைகள் பராமரிப்பின்றி தூர்ந்துபோய், மண் மேடுகளாக மாறிவிட்டன. இதனால், தற்போது பலத்த மழைபெய்தும், பெரிய கண்மாயிலிருந்து இந்த மடைகள் மூலம் மற்ற பகுதி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்லவில்லை. இதனால், விவசாயம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. 
    இதேபோல், பெரிய கண்மாய் மற்றும் வரத்து கால்வாய்களிலும் புதர்மண்டி, கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளதால், மழை நீரை தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக, விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர். 
    எனவே, மாவட்ட நிர்வாகமும், பொதுப்பணித் துறை அதிகாரிகளும் கமுதி பெரிய கண்மாயிலுள்ள மடைகளை சீரமைத்து, செட்டி ஊருணிக்கு தண்ணீர் செல்லும் வகையில் விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என, பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 
    பொதுமக்களின் புகாரைத் தொடர்ந்து, கமுதி பேரூராட்சி செயல் அலுவலர் ரா. இளவரசி, கமுதி பெரிய கண்மாயில் உள்ள மடைகளை ஆய்வு செய்து, அதன் வழித்தடங்களை ஆக்கிரமித்துள்ளவர்களிடம் விளக்கம் கேட்க உத்தரவிட்டுள்ளார். செட்டி ஊருணிக்கு மழை நீரை கொண்டு வந்து, கமுதி மக்களின் குடிநீர் தேவையை போக்க விரைவில் தீர்வு காணப்படும் எனவும், பேரூராராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai