Enable Javscript for better performance
குறுவட்ட விளையாட்டுப் போட்டியில் லயன்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி- Dinamani

சுடச்சுட

    

    குறுவட்ட விளையாட்டுப் போட்டியில் லயன்ஸ் பள்ளி மாணவர்கள் வெற்றி

    By DIN  |   Published on : 25th September 2019 08:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பரமக்குடி குறுவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற லயன்ஸ் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு, பள்ளி கல்விக்குழு சார்பில் திங்கள்கிழமை பாராட்டு விழா நடைபெற்றது. 
    இதில், 17 வயது பிரிவு தடகளப் போட்டியில் பி. தமிழ்பிரபு 200 மீ., 800 மீ., 1500 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் சாம்பியன் பட்டத்தையும், பி. கயல்விழி 800 மீ., 1500 மீ., 3 ஆயிரம் மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் முதலிடமும் பிடித்து தனி நபர் சாம்பியன் பட்டத்தை பெற்றனர். 
    11 வயது பிரிவு செஸ் போட்டியில், டி. பிரதிபா, எம். கெளசல்யா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 17 வயது மாணவர் பிரிவு வளையபந்து போட்டியில் ஏ. அகமதுபிலால், ஏ. ஹாலித்ஹசன் முதலிடம் பிடித்தனர். ஒற்றையர் பிரிவில், ஆர்.எம். ரமலாராவ் முதலிடமும், கேரம் போட்டியில் பி. அபிராமி, எஸ். குணசாருமதி ஆகியோர் முதலிடமும் பிடித்தனர்.
    19 வயது ஆண்கள் பிரிவில், கே. கவின்ராஜ், பெண்கள் பிரிவில் எம். நர்மதா ஆகியோர் முதலிடம் பிடித்தனர். 17 வயது பிரிவில் எஸ். அம்ருதா இறகுப்பந்து போட்டியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். 
    இதேபோல், தனித்திறன் போட்டிகளான உயரம் தாண்டுதல், ஓட்டப் போட்டி, குண்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில் 13 மாணவர்கள் முதல் மற்றும் இரண்டாம் இடம் பிடித்துள்ளனர். 
    வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சியளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், பள்ளி கல்விக்குழுத் தலைவர் ஆர்.எம். கண்ணப்பன், செயலர் குரு. சண்முகசுந்தரம், பொருளாளர் எம். மணிமாறன், பள்ளி முதல்வர் பி. சோபனாதேவி மற்றும் கல்விக்குழு நிர்வாகிகள் பாராட்டி கெளரவித்தனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai