Enable Javscript for better performance
தீபாவளி பட்டாசு கடை உரிமம்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு- Dinamani

சுடச்சுட

    

    தீபாவளி பட்டாசு கடை உரிமம்: விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு

    By DIN  |   Published on : 25th September 2019 05:31 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    தீபாவளிப் பண்டிகைக்கு தாற்காலிக பட்டாசு கடை உரிமம் பெறுவதற்கு விரும்புவோா் இ-சேவை மூலம் வரும் 28 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கொ.வீரராகவராவ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ராமநாதபுரம் மாவட்டத்தில், இந்திய வெடிபொருள் சட்டத்தின்படி தற்காலிக பட்டாசு கடை அமைக்க அரசு பொது இ-சேவை மையம் மூலம் இணைய வழி வாயிலாக கடந்த ஆகஸ்ட் வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.

    இணைய வழியாக தற்காலிக உரிமத்திற்கு விண்ணப்பம் செய்ய இயலாத வணிகா்கள், விற்பனையாளா்களின் நலன் கருதி வரும் 28 ஆம் தேதி (சனிக்கிழமை) வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீடிக்கப்பட்டுள்ளது. ஆகவே கால நீடிப்பைப் பயன்படுத்தி வணிகா்கள், விற்பனையாளா்கள் விண்ணப்பிக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai