Enable Javscript for better performance
ராமநாதபுரம், திருப்புல்லாணி பகுதியில் நாளை மின்தடை- Dinamani

சுடச்சுட

    

    ராமநாதபுரம், திருப்புல்லாணி உள்ளிட்ட பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக செப்டம்பர் 26 ஆம் தேதி (வியாழக்கிழமை) மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
     இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் ராமநாதபுரம் நகர் உதவி செயற்பொறியாளர் ஜி.கங்காதரன் விடுத்துள்ள செய்திக்குறிப்பு:  ஆர்.எஸ்.மடை, ராமநாதபுரம், ரெகுநாதபுரம், தேவிபட்டிணம், ஆர்.காவனூர் ஆகிய துணை மின்நிலையங்களில்  வரும் 26 ஆம் தேதி மாதாந்திர பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
    அதனால் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் பகுதிகள் விவரம்:  ராமநாதபுரம் அரண்மனை, பழைய, புதிய பேருந்து நிலையங்கள், கேணிக்கரை, சக்கரக்கோட்டை, பாரதிநகர், பட்டிணம்காத்தான், சின்னக்கடை, அச்சுந்தன்வயல், செய்யதம்மாள் பொறியியல் கல்லூரி,  திருப்புல்லாணி, தெற்குத்தரவை, எம்.எஸ்.கே.நகர், பசும்பொன் நகர், கூரியூர், காஞ்சிரங்குடி, புத்தேந்தல், வண்ணிக்குடி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
    ரெகுநாதபுரம், பெரியபட்டிணம், முத்துப்பேட்டை, காரான், வண்ணாங்குண்டு, தினைக்குளம், உத்தரவை, சேதுக்கரை, தெற்குகாட்டூர், நைனாமரைக்கான்,  தேவிபட்டிணம், காட்டூரணி, அண்ணா பல்கலைக்கழக வளாகம், பொட்டகவயல், திருப்பாலைக்குடி, சிறுவயல், பெருவயல், சித்தார்கோட்டை, ஆர்.காவனூர், தொருவளூர், குளத்தூர், முதலூர், கிளியூர், தேத்தாங்கால் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai