Enable Javscript for better performance
ராமேசுவரத்தில் பலத்த மழை: கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரத்தில் பலத்த மழை: கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது

    By DIN  |   Published on : 25th September 2019 08:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை பெய்த பலத்த மழையால் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. 
    ராமேசுவரம், தங்கச்சிமடம், பாம்பன் கடலோரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை அதிகாலை 4 மணி முதல் பலத்த மழை பெய்தது.  இதனால் ராமநாதசுவாமி கோயிலுக்குள் மழை நீர் புகுந்தது. 
    இதனால் பக்தர்கள் மழைநீரில் கால் பதித்த படியே தரிசனத்திற்கு சென்றனர். இதனால் கோயில் தூய்மைப் பணியாளர்கள் விரைந்து வந்து தண்ணீரை வெறியேற்றினர்.  
    கோயிலுக்குள் தேங்கும் மழை நீரை  வெளியேற்றும் வகையில் ரூ.3.85 கோடி மதிப்பிட்டில் மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ராமநாதசுவாமி கோயிலை சுற்றி ராட்சத கால்வாய் அமைக்கும் பணி கடந்த 6 மாதங்களுக்கு முன் தொடங்கியது. ஆனால்  பணிகள் மந்தமாகவே நடைபெறுகிறது. இதனால் கோயிலுக்குள் மழைநீர் புகுந்தது. 
    மேலும் மழை பெய்யத் தொடங்கிய சில நிமிடங்களில் பாம்பன் அருகே உயர் மின் அழுத்த கம்பங்களில் உள்ள இன்சுலேட்டர்கள் வெடித்து சிதறியதால் மின் தடை  ஏற்பட்டது. பல மணி நேரம் மின்வாரிய ஊழியர்கள் சேதமடைந்த இன்சுலேட்டர்களை மாற்றிய பின் மின்சாரம் வழங்கப்பட்டது. 
    மேலும் ராமேசுவரம் நகராட்சி பகுதியில் உள்ள கழிவு நீர் கால்வாய்கள் 90 சதவீதம் தூர் வாரப்படால் உள்ளன. 
    இதனால்  மழை தொடங்கியவுடன் சாலையில் கழிவு நீருடன், மழைநீர் கலந்து பெருக்கெடுத்து  ஓடியது. இனி மழைக் காலம் வர உள்ள நிலையில் மாவட்ட நிர்வாகம் உடனே கழிவு நீர் கால்வாய்களை தூர் வார வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 
    மழையளவு: ராமேசுவரம் 84.20 மி.மீ, தங்கச்சிமடம் 56.60 மி.மீ, பாம்பன் 69.20 மி.மீ. மழை பதிவானது.


     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai