கமுதி அருகே ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்டக் கோரிக்கை

கமுதி அருகே எருமைகுளம் ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

கமுதி அருகே எருமைகுளம் ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் கட்ட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 
கமுதி அருகேயுள்ள எருமைகுளம் ஊராட்சி அலுவலகக் கட்டடம் கடந்த 2001 இல் கட்டபட்டது. தரமின்றி கட்டப்பட்ட இந்த ஊராட்சி அலுவலகக் கட்டடம் கடந்த 2010 இல் இடிந்து விழுந்தது. அதன்பின்னர், கடந்த 2015 ஆம் ஆண்டிலிருந்து நூலகக் கட்டடத்தின் பாதி இடத்தில் ஊராட்சி அலுவலகமும், மீதமுள்ள இடத்தில் துணை சுகாதார நிலையமும் செயல்பட்டு வருகின்றன. 
இந்நிலையில், குறுகலான இடத்தில் ஊராட்சி அலுவலகம் செயல்பட்டு வருவதால், பதிவேடுகள் உள்ளிட்ட ஆவணங்களை பாதுகாப்பதில் சிக்கல் ஏற்பட்டு வருகிறது. இதனால், நூலகமும் சரியாக செயல்பட முடியாத நிலை உள்ளது. 
ஊராட்சி அலுவலகக் கட்டடம் இடிந்து விழுந்து 10 ஆண்டுகளுக்கும் மேலாகியும், அதற்குப் பதிலாக புதிய கட்டடம் கட்டப்படாமல், நூலகக் கட்டடத்தில் செயல்படுவதால், அங்கு செல்லும் பொதுமக்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.
எனவே, ஊராட்சி அலுவலகத்துக்கு புதிய கட்டடம் விரைவில் கட்ட மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com