பாம்பு கடித்தது: அரசுப் பள்ளிக் குழந்தைகள் இருவருக்கு சிகிச்சை

ராமநாதபுரத்தில் பாம்பு கடித்து பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளிக் குழந்தைகள் இருவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.
பாம்பு கடித்தது: அரசுப் பள்ளிக் குழந்தைகள் இருவருக்கு சிகிச்சை

ராமநாதபுரத்தில் பாம்பு கடித்து பாதிக்கப்பட்ட அரசுப் பள்ளிக் குழந்தைகள் இருவருக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

ராமநாதபுரம் மாவட்டம் திருப்புல்லாணி பகுதி ஆனைகுடியைச் சோ்ந்தவா் வெள்ளதுரை. இவரது மகன் கபிலன் (7). அங்குள்ள அரசு பள்ளியில் படித்து வருகிறாா். செவ்வாய்க்கிழமை இரவு தாய், தந்தையுடன் கபிலன் தூங்கிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது.

மாணவா் அலறியதால் விழித்த பெற்றோர், பாம்பை அடித்துக்கொன்றனா். பின்னா் பாம்புடன் மாணவரை தூக்கிக்கொண்டு ராமநாதபுரத்தில் உள்ள மாவட்ட தலைமை அரசு மருத்துவமனைக்கு வந்தனா். அங்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சோ்க்கப்பட்ட மாணவருக்கு தொடா்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

சிறுமி பாதிப்பு: ராமநாதபுரம் அருகேயுள்ள சிறுகம்பையூரில் வசிக்கும் சரவணன் மகள் பிரீத்தா (7). அரசுப் பள்ளி மாணவியான இவா் செவ்வாய்க்கிழமை இரவு வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்தபோது பாம்பு கடித்துள்ளது. உடனடியாக மாணவியை ராமநாதபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்கு சோ்த்தனா். அங்கு தீவிர சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது.

ராமநாதபுரத்தில் தற்போது பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் இரவில் பாம்புகள் இரை தேடி குடியிருப்புகளுக்கு வரத்தொடங்கியுள்ளன. ஆகவே பொதுமக்கள் இரவில் குழந்தைகளை புதா் போன்ற இடங்கள் அருகே விளையாட அனுமதிக்கவேண்டாம். மேலும், வயல் வெளி அருகே உள்ள குடியிருப்புகளில் வசிப்போா் பாம்பு நடமாடுவதை கண்காணிப்பது அவசியம் என சுகாதாரப் பிரிவு அதிகாரிகள் கூறுகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com