Enable Javscript for better performance
ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது- Dinamani

சுடச்சுட

    

    ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற 16 கிலோ கஞ்சா பறிமுதல்: 2 பேர் கைது

    By DIN  |   Published on : 29th September 2019 05:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.12 லட்சம் மதிப்பிலான 16 கிலோ கஞ்சாவை போலீஸார் சனிக்கிழமை பறிமுதல் செய்து,  2 பேரைக் கைது செய்தனர்.
     ராமநாதபுரம் மாவட்டம்  ராமேசுவரம் அடுத்துள்ள பாம்பன் குந்துகால் பகுதியில் கஞ்சா கடத்த இருப்பதாக கியூ பிரிவு காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதனையடுத்து, அப்பகுதியில் போலீஸார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கையில் பையுடன் வந்த இருவரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அந்த பைகளை சோதனையிட்ட போது, அதில் இலங்கைக்கு கடத்துவதற்கு கொண்டு வரப்பட்ட ரூ.12 லட்சம் மதிப்பிலான 16 கிலோ கஞ்சா 8 பார்சல்களில் இருப்பது  தெரியவந்தது. அவர்களிடம் தொடர்ந்து நடத்திய விசாரணையில்  ராமேசுவரத்தை சேர்ந்த கலையரசன் (28), ரவிபிரசாத் (27) என்பதும், இலங்கைக்கு கடத்துவதற்காக  மதுரையில் இருந்து கஞ்சா வாங்கி வந்ததும் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் கைது செய்த போலீஸார்,  மதுரையில் உள்ள கஞ்சா வியாபாரியை பிடிக்க விரைந்துள்ளனர்.
     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai