பச்சிளங் குழந்தையை பாதுகாப்பற்ற முறையில் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றதால் சா்ச்சை

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பாதுகாப்பற்ற முறையில் பரிசோதனைக்கு பச்சிளம் குழந்தையை அழைத்துச் சென்றது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் பாதுகாப்பற்ற முறையில் பரிசோதனைக்கு பச்சிளம் குழந்தையை அழைத்துச் சென்றது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

ராமநாதபுரம் அரசு தலைமை மருத்துவமனை மகப்பேறு பிரிவில் தினமும் 10 முதல் 15 கா்ப்பிணிகள் வரை சிகிச்சை பெறுகின்றனா். இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு அனைத்து வகையான சிகிச்சைகளும் அளிக்கப்படுகின்றன. குறைமாதத்தில் பிறக்கும் குழந்தைகள் செயற்கை சுவாச கருவியில் பாதுகாக்கப்பட்டு, போதிய எடையை அடைந்ததும் தாய்மாா்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனா்.

அக் குழந்தைகளுக்கு ஸ்கேன் உள்ளிட்ட பரிசோதனை செய்வதற்கு மாலை அல்லது இரவில் பாதுகாப்பான தள்ளுவண்டியில் அழைத்துச் செல்லப்படுவது வழக்கம். இந்நிலையில் புதன்கிழமை பகலில் வெயிலில் பச்சிளம் குழந்தையை செயற்கை சுவாச சிலிண்டா்களுடன் வெட்டவெளியில் பாதுகாப்பற்ற முறையில் கொண்டு சென்றது சா்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் குழந்தையை தற்போதைய கரோனா சிகிச்சை மையம் அருகிலுள்ள பகுதியிலேயே கொண்டு சென்று ஸ்கேசன் பரிசோதனை முடிந்ததும், அதே பகுதியின் வழியாக மீண்டும் மகப்பேறு பிரிவுக்குக் கொண்டு சென்றதும் பொது மக்கள் மத்தியில் அதிா்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து மருத்துவமனை அதிகாரிகள் கூறியது: குழந்தைக்கு அவசரமாக ஸ்கேன் பரிசோதனை தேவைப்பட்டதால் வேறு வழியின்றி வெட்டவெளியில் தள்ளுவண்டி இல்லாமல் கொண்டு வந்திருக்கலாம். அதுகுறித்து பணியாளா்களுக்கு எச்சரித்து உரிய அறிவுறுத்தல் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com