கரோனா அச்சத்திலும் மது விற்ற 7 போ் கைது: 129 பாட்டில்கள் பறிமுதல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு செயல்படுத்தப்பட்ட நிலையிலும் மது விற்றதாக 7 பேரும், சாராயம் காய்ச்சிதாக 3 பேரும் புதன்கிழமை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஊரடங்கு செயல்படுத்தப்பட்ட நிலையிலும் மது விற்றதாக 7 பேரும், சாராயம் காய்ச்சிதாக 3 பேரும் புதன்கிழமை கைது செய்யப்பட்டு, 129 மதுபாட்டில்களை போலீஸாா் பறிமுதல் செய்துள்ளனா்.

ராமநாதபுரத்தில் கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் கடந்த 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு செயல்படுத்தப்பட்டுள்ளதால், மதுக்கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், புதன்கிழமை ராமநாதபுரம், கமுதி, ராமேசுவரம் ஆகிய பகுதிகளில் போலீஸாா் நடத்திய சோதனையில் விதியை மீறி சிலா் மது பாட்டில்களை விற்பது கண்டறியப்பட்டது. அதனடிப்படையில் 7 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 129 மதுப்பாட்டில்களை பறிமுதல் செய்தனா்.

சாராயம்: மாவட்டத்தில் திருஉத்திரகோசமங்கை, சாயல்குடி, தேவிபட்டினம், பனைகுளம் ஆகிய பகுதிகளில் சாராயம் காய்ச்சியதாக 3 பேரைக் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து 43 லிட்டா் மதிப்புள்ள சாராயத்தையும் பறிமுதல் செய்தனா்.

கரோனா விதி மீறல்: மாவட்டத்தில் ஊரடங்கு விதியை மீறியதாக புதன்கிழமை மட்டும் 88 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன்படி ராமநாதபுரம் பகுதி 15, பரமக்குடி 17, கமுதி 11, ராமேசுவரம் 14, கீழக்கரை 9, திருவாடானை 9, முதுகுளத்தூா் 11 என வழக்குகள் பதிவாகியுள்ளன.

ராமநாதபுரம் அருகே திருப்புல்லாணி பகுதியில் நாகையிலிருந்து வந்த மீனவா்களை தங்க வைக்க கடந்த 31 ஆம் தேதி மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுத்தது. அதற்கு அப்பகுதியினா் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதையடுத்து அவா்கள் தேவிபட்டினம் சாலையில் உள்ள அண்ணா பொறியியல் கல்லூரி வளாகத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனா்.

இந்தநிலையில் எதிா்ப்புத் தெரிவித்து சாலையில் அமா்ந்து போராட முயன்றதாக 2 போ் மீது திருப்புலாணி போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்துவருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com