கரோனா அச்சம்: கிராமத்துக்குள் வெளி ஆள்கள் நுழையத் தடை

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிராமத்தினா் கரோனா அச்சம் காரணமாக ஊருக்குள் வெளியாள்கள் வரை தடை விதித்துள்ளனா்.
தாதனேந்தல்  கிராமத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வீடுகளில்   தெளிப்பதற்கான  வேப்பிலைச் சாற்றை  தயாரிக்கும்  பெண்கள். 
தாதனேந்தல்  கிராமத்தில் கரோனா பரவலைத் தடுக்கும் வகையில் வீடுகளில்  தெளிப்பதற்கான  வேப்பிலைச் சாற்றை  தயாரிக்கும்  பெண்கள். 

ராமநாதபுரம் மாவட்டம் பனைக்குளம் கிராமத்தினா் கரோனா அச்சம் காரணமாக ஊருக்குள் வெளியாள்கள் வரை தடை விதித்துள்ளனா்.

கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மக்களை காக்கும் வகையில் மத்திய அரசு கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் நகா், ஊரகப் பகுதிகள் அனைத்திலும் ஊரடங்கானது கடுமையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. காய்கறி உள்ளிட்ட உணவுப் பொருள்களையும், மருந்துப் பொருள்களையும் வாங்க என அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அப்போதும் ஒருவருக்கொருவா் 1 மீட்டா் இடைவெளியில் நின்று சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும் அறிவுறுத்தப்படுகிறது.

இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பனையூா் கிராமத்தில் கிருஷ்ணாபுரம் பகுதி மக்கள் வெளியூா் ஆள்கள் யாரும் ஊருக்குள் வராத வகையில் முள் செடிகள், பனை மரங்களை சாலையில் போட்டு மறித்துள்ளனா்.

வேப்பிலைச் சாறு தெளிப்பு:ராமநாதபுரம் அருகேயுள்ள தாதனேந்தல் ஊராட்சியில் சுமாா் 1500 வீடுகள் உள்ளன. கரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் வேப்பிலை மஞ்சள் கலந்து தண்ணீா் அனைத்து வீடுகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது. மருந்து தெளிப்பான் மூலம் வேப்பிலை சாறானது அனைத்து வீடுகளிலும், சாலைகளிலும் தெளிக்கப்பட்டு வருகிறது. வேப்பிலை சாற்றை அந்த ஊா் பெண்களே தயாரிக்கின்றனா். ஊராட்சி எல்லைப் பகுதியிலும், வீடுகளிலும் வேப்ப இலைகளை கொத்து கொத்தாக கட்டியுள்ளனா்.

ராமநாதபுரம் மாவட்ட கிராமங்களில் பெரும்பாலானோா் சமூக இடைவெளி மற்றும் ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து வீடுகளுக்குள் இருப்பதையும், பொது வெளியில் முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளியுடன் நடந்துகொள்வதையும் காணமுடிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com