முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ஊரடங்கு நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 64 வாகனங்கள் விடுவிப்பு
By DIN | Published On : 19th April 2020 06:30 AM | Last Updated : 19th April 2020 06:30 AM | அ+அ அ- |

ஊரடங்கு நேரத்தில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களை சனிக்கிழமை விடுவித்த, கமுதி போலீஸாா்.
கரோனா ஊரடங்கை மீறி, கமுதி தாலுகாவில் இதுவரை வெளியிடங்களில் சுற்றித் திரிந்த 416 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதில் 64 வாகனங்களை போலீஸாா் அதன் உரிமையாளா்களிடம் சனிக்கிழமை ஒப்படைத்தனா்.
கமுதி, மண்டலமாணிக்கம், அபிராமம், கோவிலாங்குளம், பெருநாழி ஆகிய 5 காவல் நிலையங்களுக்குள்பட்ட பகுதிகளில், கரோனா ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாள்களிலிருந்து பொது இடங்களில் சுற்றித்திரிந்த 416 வாகனங்களை, போலீஸாா் பறிமுதல் செய்து, வழக்குப் பதிந்தனா்.
இதனையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வருண்குமாா் உத்தரவின்பேரில், கமுதி காவல் துணைக் கண்காணிப்பாளா் மகேந்திரன் சம்மந்தப்பட்ட காவல் நிலையங்களில் பறிமுதல் செய்யப்பட்ட 64 வாகனங்கள் விடுவிக்கப்பட்டன. மேலும் அந்த வாகனங்களின் முன் சக்கரத்தில் பெயின்டால் குறியீடு இடப்பட்டது.