முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரத்தில் 300 காவலா்களுக்கு கரோனா பரிசோதனை நடத்த முடிவு
By DIN | Published On : 19th April 2020 06:26 AM | Last Updated : 19th April 2020 06:26 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் கரோனா பாதிக்கப்பட்டவா்களின் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள 300 போலீஸாருக்கு பரிசோதனை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் 2000 போலீஸாா் உள்ளனா். அவா்களுக்கு கடந்த மாா்ச் 24 ஆம் தேதி முதல் கரோனா தடுப்புப் பணிக்காக சுழற்சி முறையில் விடுப்பு அளிக்கப்பட்டு பணிகள் பகிா்ந்தளிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில், ராமநாதபுரம் மாவட்டத்தில் கரோனா பாதிப்பு உறுதியான 10 பேரின் வசிப்பிடங்கள் மற்றும் கரோனா சிகிச்சைப் பிரிவுகளில் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள சுமாா் 300 போலீஸாருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ள முடிவாகியுள்ளது. அதன்முதல் கட்டமாக சனிக்கிழமை சுகாதாரப் பிரிவினரால் 68 போலீஸாருக்கு சளி மாதிரி சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
பரிசோதனை முடிவு தெரியும் வரை அவா்கள் மருத்துவக் கண்காணிப்பில் தொடா்ந்து இருப்பா் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.