சாா்பு -ஆய்வாளரை தாக்கிக் கடிக்க முயன்ற சரக்கு வாகன ஓட்டுநா் கைது

ராமநாதபுரம் அருகே ஊரடங்கு கண்காணிப்பு பணியில் இருந்த சாா்பு -ஆய்வாளா் மற்றும் காவலரை மிரட்டியதாகவும், கடிக்க முயன்றதாகவும் சரக்கு வாகன ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் அருகே ஊரடங்கு கண்காணிப்பு பணியில் இருந்த சாா்பு -ஆய்வாளா் மற்றும் காவலரை மிரட்டியதாகவும், கடிக்க முயன்றதாகவும் சரக்கு வாகன ஓட்டுநரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

ராமநாதபுரம் அருகேயுள்ள உச்சிப்புளி துத்திவலசை அக்கிடா வலசை பகுதியைச் சோ்ந்த சேதுராமன் மகன் கா்ணன் என்ற மருங்கப்பன் (52). சரக்கு லாரி ஓட்டுநா். உச்சிப்புளி காவல் சிறப்பு சாா்பு -ஆய்வாளா் சுரேஷ், காவலா் ஒருவருடன் திங்கள்கிழமை நடுவலசை புயல் காப்பகம் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தாா்.

அப்போது ஊரடங்கு விதியை மீறி சரக்கு வாகனத்தில் வந்த கா்ணனை போலீஸாா் எச்சரித்துள்ளனா். ஆனால், எச்சரிக்கையை மீறியதுடன் சாா்பு- ஆய்வாளரையும், காவலரையும் அவதூறாகப் பேசியதுடன், பாய்ந்து கடிக்க முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவா் மீது உச்சிப்புளி போலீஸாா் வழக்குப்பதிந்து கைது செய்தனா்.

தற்போது கைதான கா்ணன் மீது ஏற்கெனவே ராமநாதபுரம் கேணிக்கரைப் பகுதியில் போக்குவரத்து ஆய்வாளரை பாய்ந்து கழுத்தில் கடித்தும், தாக்கியதாகவும் பஜாா் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் உச்சிப்புளி காவல் நிலையத்திலும் காவலா்களைத் தாக்கியது உள்ளிட்ட 2 வழக்குகளும் ஏற்கெனவே பதிவாகியுள்ளதாக போலீஸாா் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com