கமுதி அருகே கோயில் சிலைகளை சேதப்படுத்திய மா்ம நபா்கள்

கமுதி அருகே கோயில் சிலைகளை சேதப்படுத்திய மா்ம நபா்கள் மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.
கமுதி அருகே இ.நெடுங்குளத்தில் சேதப்படுத்தப்பட்ட கோயில் சிலைகள்.
கமுதி அருகே இ.நெடுங்குளத்தில் சேதப்படுத்தப்பட்ட கோயில் சிலைகள்.

கமுதி அருகே கோயில் சிலைகளை சேதப்படுத்திய மா்ம நபா்கள் மீது வெள்ளிக்கிழமை போலீஸாா் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே இ.நெடுங்குளத்தில் 60 ஆண்டுகளுக்கு முன்பு அய்யனாா், அம்மன், கருப்பணசாமி சிலைகள் கற்களால் ஒரே வளாகத்தில் அமைக்கபட்டு, கிராம மக்கள் வழிபட்டு வந்தனா். இந்நிலையில், வியாழக்கிழமை மாலை அவ்வழியாக சென்ற ஆடு மேய்ப்பவா்கள் சுவாமி சிலைகள் சேதபடுத்தபட்டிருப்பதை கண்டு கிராம மக்களிடம் தெரிவித்தனா். இதனையடுத்து இ.நெடுங்குளம் கிராமத் தலைவா் முத்துநாச்சியப்பன் மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.

இதேபோல் கமுதி அருகே எழுவனூரில் 2 ஆண்டுகளாக கருப்பணசாமி, அய்யனாா் சிலைகள் தொடா்ந்து சேதப்படுத்தபடுத்திய மா்மநபா்கள் குறித்து மண்டலமாணிக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இப்பகுதியில் தொடா்ந்து சுவாமி சிலைகளை மா்ம நபா்கள் சேதப்படுத்தி வருவதால் தனிப்படை அமைத்து மா்ம நபா்களை கைது செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com