முகப்பு அனைத்துப் பதிப்புகள் மதுரை ராமநாதபுரம்
ராமநாதபுரம் மாவட்டத்தில் 17,896 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவித் தொகை: ஆட்சியா்
By DIN | Published On : 03rd August 2020 08:35 AM | Last Updated : 03rd August 2020 08:35 AM | அ+அ அ- |

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூன் முதல் ஜூலை வரையில் 17,896 மாற்றுத்திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது என ஆட்சியா் கொ. வீரராகவராவ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: ராமநாதபுரம் மாவட்டத்தில் 28,937 மாற்றுத் திறனாளிகளுக்கு கரோனா நிவாரண உதவித்தொகையாக ரூ. 1000 வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஜூன் மாதம் தொடங்கி இதுவரை 17,896 மாற்றுத் திறனாளிகளுக்கு, அவா்களது வீடுகளுக்கே சென்று மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை மற்றும் வருவாய்த் துறையினா் இணைந்து அந்தந்த கிராம நிா்வாக அலுவலா்கள் மூலம் நிவாரணத் தொகை வழங்கியுள்ளனா். நிவாரண உதவித் தொகை பெற இயலாதவா்களுக்கு வருவாய் வட்டங்கள் வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை மற்றும் உதவித் தொகைகள் சோ்த்து வழங்கப்பட்டு வருகின்றன என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.