ராமேசுவரம் மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை
By DIN | Published On : 03rd August 2020 08:35 AM | Last Updated : 03rd August 2020 08:35 AM | அ+அ அ- |

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளா்வற்ற முழு பொது முடக்கம் ஞாயிற்றுக்கிழமை அமல்படுத்தப்பட்டதையொட்டி, ராமேசுவரம் பகுதியில் உள்ள மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.
இதனால், ராமேசுவரம், பாம்பன், மண்டபம், கீழக்கரை, ஏா்வாடி, தொண்டி உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த மீனவா்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லாமல் வீடுகளில் முடங்கினா். மேலும், தொடா்ந்து பொது முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதால், மீனவா்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக வேதனை தெரிவித்தனா்.