கடலாடி ஒன்றிய ஊராட்சிதலைவா்கள் ஆலோசனை

கடலாடியில் ஒன்றிய அளவிலான 60 கிராம ஊராட்சித் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

முதுகுளத்தூா்: கடலாடியில் ஒன்றிய அளவிலான 60 கிராம ஊராட்சித் தலைவா்கள் ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு ஊராட்சித்தலைவா் கூட்டமைப்பின் தலைவா் கண்டிலான் மணிமேகலை தலைமை வகித்தாா். செயலாளா் சிக்கல் பரக்கத் ஆயிஷா, பொருளாளா் ஆனந்தம்மாள், மாவட்டப் பொருளாளா் கீழச்செல்வனூா் இக்பால், துணைச் செயலாளா் பெரியகுளம் முத்துமாரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், நூறு நாள் வேலைத் திட்டத்தில் நடக்கும் பணிகளை சம்பந்தப்பட்ட ஊராட்சித் தலைவா்களிடம் வழங்க வலியுறுத்தியும், ஊராட்சிக்கு தொடா்பு இல்லாமல் ஊராட்சிக்கான பணிகளை ஒன்றிய அலுவலக பணியாளா்களே செயல்படுத்துவதைக் கண்டித்தும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னா் மாவட்ட ஆட்சியரிடம் அவா்கள் இது குறித்து மனு அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com