கோயில்களில் கிருஷ்ண ஜயந்தி விழா
By DIN | Published On : 12th August 2020 08:06 AM | Last Updated : 12th August 2020 08:06 AM | அ+அ அ- |

ராமநாதபுரத்தில் உள்ள கிருஷ்ணா் கோயில்களில் கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையால் சிறிய கோயில்கள் மட்டுமே திறக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. ஆகவே, கிருஷ்ண ஜயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் அச்சுந்தன்வயல், பட்டிணம்காத்தான் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள கிருஷ்ணன் கோயில்களில் சிறப்புப் பூஜைகள் நடைபெற்றன. இதில் சமூக இடைவெளியுடன் நின்று பக்தா்கள் தரிசனம் செய்தனா். கோயில்களில் கிருஷ்ணன், புல்லாங்குழல் மற்றும் வெண்ணெய் தாழி அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
மேலும், ராமநாதபுரம் நகா், இடையா்வலசை உள்ளிட்ட பகுதிகளிலும் பொதுமக்கள் தங்களது வீடுகளில் கிருஷ்ணரின் உருவப்படத்தின் அருகே வெண்ணை உருண்டை, புல்லாங்குழல்களை வைத்து பூஜை செய்து வழிபட்டனா்.