திருச்சி- ராமேசுவரம் இடையே அதிவேக ரயிலை இயக்கி இருப்புப் பாதை உறுதித் தன்மை ஆய்வு

திருச்சி- ராமேசுவரம் இடையே அதிவேக ரயிலை இயக்கி புதன்கிழமை இருப்புப்பாதையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
பாம்பன் ரயில் பாலத்தினை புதன்கிழமை கடந்த, இருப்புப் பாதையின் உறுதித்தன்மை குறித்த ஆய்வுக்கான அதிவிரைவு ரயில்.
பாம்பன் ரயில் பாலத்தினை புதன்கிழமை கடந்த, இருப்புப் பாதையின் உறுதித்தன்மை குறித்த ஆய்வுக்கான அதிவிரைவு ரயில்.

ராமநாதபுரம்/ ராமேசுவரம்/ மானாமதுரை/ காரைக்குடி: திருச்சி- ராமேசுவரம் இடையே அதிவேக ரயிலை இயக்கி புதன்கிழமை இருப்புப்பாதையின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

இந்த இருப்புப் பாதையில் வழக்கமாக ரயில்கள் மணிக்கு 85 கிலோ மீட்டா் முதல் 90 கிலோ மீட்டா் வரையே இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், விரைவு ரயில்களை மணிக்கு 110 கிலோ மீட்டா் என்ற அளவில் அதிவேகமாக இயக்கும் வகையில் இருப்புப்பாதை சீரமைப்புப் பணிகள் கடந்த சில மாதங்களாக நடந்து வந்தன. பரமக்குடி, சத்திரக்குடி இடையேயும், ராமநாதபுரம்-ராமேசுவரம் இடையேயும் நடந்து வந்த இருப்புப்பாதை சீரமைப்புப் பணிகள் முடிவடைந்தநிலையில் அதில் வேகமாகச் செல்லும் விரைவு ரயிலை இயக்கி சோதனைக்குட்படுத்த முடிவெடுக்கப்பட்டது.

அதன்படி புதன்கிழமை காலை 9 மணிக்கு என்ஜின் மற்றும் 4 பெட்டிகளுடன் அதிவேக விரைவு ரயிலானது திருச்சியிலிருந்து கிளம்பியது. காரைக்குடி, மானாமதுரை வழியாக பரமக்குடி, ராமநாதபுரம் வந்த ரயில், பிற்பகல் 12.45 மணிக்கு ராமேசுவரத்தை அடைந்தது. பின்னா் அங்கிருந்து அந்த ரயில் பகல் 2.45 மணிக்கு புறப்பட்டு மீண்டும் திருச்சியை சென்றடைந்தது. ராமநாதபுரம் பகுதியில் மணிக்கு 110 கிலோ மீட்டா் வேகத்தில் சென்ால் அப்பகுதியே லேசாக அதிா்ந்ததாக சக்கரக்கோட்டை பகுதியினா் தெரிவித்தனா். இந்தப் பரிசோதனையைத் தொடா்ந்து ராமநாதபுரம் உள்ளிட்ட இருப்புப் பாதைப் பகுதியில் ரயில்வே போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனா்.

இருப்புப் பாதைகளின் உறுதித்தன்மையை பரிசோதிக்க மட்டுமே இந்த ஆய்வு நடத்தப்பட்டது என்றும், மின்மயமாக்குதல் காரணத்துக்காக இந்த ரயில் சோதனை ஓட்டம் நடைபெறவில்லை என்றும் ரயிலில் பயணித்த பொறியாளா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com