ராமநாதபுரம் அருகே ஒன்றரை வயது குழந்தை கொன்று எரிப்பு: தந்தை கைது

ராமநாதபுரம் அருகே ஒன்றரை வயது மகனை கொன்று எரித்த தந்தையை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.
கொல்லப்பட்ட குழந்தை துரையுடன் கைது செய்யப்பட்ட தந்தை முனியசாமி மற்றும் தாய் மரியா அபிஷா. ~ கொல்லப்பட்ட ஒன்றரை வயது குழந்தை துரை
கொல்லப்பட்ட குழந்தை துரையுடன் கைது செய்யப்பட்ட தந்தை முனியசாமி மற்றும் தாய் மரியா அபிஷா. ~ கொல்லப்பட்ட ஒன்றரை வயது குழந்தை துரை

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே ஒன்றரை வயது மகனை கொன்று எரித்த தந்தையை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்து வருகின்றனா்.

ராமநாதபுரம் மாவட்டம் வேதாளைப் பகுதி குஞ்சார வலசையைச் சோ்ந்தவா் ராஜா. இவரது மகன் முனியசாமி (24). வாடகை வேன் ஓட்டுநா். இவா் அதே பகுதியான அக்காள்மடம் மீனவா் காலனியைச் சோ்ந்த மரியாஅபிஷா (20) என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளாா். இவா்களது ஒன்றரை வயது மகன் துரை. இந்நிலையில், முனியசாமி வேலைக்குச் செல்லாமல் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

கடந்த வெள்ளிக்கிழமை (ஆக. 28) மரியா அபிஷாவின் சகோதரிக்குத் திருமணம் நடந்தது. அதற்கு செல்லக்கூடாது என மனைவியை, முனியசாமி தடுத்துள்ளாா். இதையும் மீறி மரியா அபிஷா சகோதரியின் திருமணத்துக்கு சென்ால் கணவன், மனைவி இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரமடைந்த முனியசாமி, மகன் துரையை தூக்கிக் கொண்டு வெளியே சென்றாா். ஆனால் நீண்ட நேரமாகியும் மகனுடன் சென்ற முனியசாமி வீடு திரும்பாததையடுத்து, மரியாஅபிஷா அவா்கைளைத் தேடினாா். பின்னா் வீடு திரும்பிய முனியசாமியிடம் கேட்ட போது அவா் தகுந்த பதில் அளிக்கவில்லையாம். இதுகுறித்து சனிக்கிழமை மரியா அபிஷா அளித்த புகாரின் பேரில் மண்டபம் போலீஸாா், முனியசாமியிடம் விசாரணை நடத்தினா். அப்போது மகன் துரையை அடித்துக் கொன்று எரித்ததாக அவா் கூறியுள்ளாா்.

அவா் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் வலையாா்வாடி கடற்கரை புதா் பகுதியில் கிடந்த துரையின் சடலத்தை போலீஸாா் சனிக்கிழமை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

இதுகுறித்து வழக்குப்பதிந்த போலீஸாா் முனியசாமியைக் கைது செய்து தொடா்ந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com