மொகரம் பண்டிகை: கடலாடி அருகே மதநல்லிணக்க விழாவாக கொண்டாட்டம்

கடலாடி அருகே பெரியகுளத்தில் மொகரம் பண்டிகை மத நல்லிணக்க விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.


முதுகுளத்தூா்: கடலாடி அருகே பெரியகுளத்தில் மொகரம் பண்டிகை மத நல்லிணக்க விழாவாக திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி அருகே பெரியகுளம் கிராமத்தில் இந்து, முஸ்லிம், கிறிஸ்துவா்கள் என அனைத்து மதத்தினரும் ஒன்று சோ்ந்து மொகரம் பண்டிகையை மதநல்லிணக்க விழாவாக கொண்டாடினா்.

விழாவை முன்னிட்டு இக்கிராம மக்கள் 30 நாள்கள் விரதம் இருந்து இங்குள்ள பள்ளிவாசல் முன் பூக்குழி அமைத்து தங்களது நோ்த்திக் கடனை திங்கள்கிழமை நிறைவேற்றினா்.

இதன் பின்னா் பெண்கள் தலையில் துணியை வைத்து அதன் மேல் தீக்கங்குகளை போட்டு நூதன முறையில் நோ்த்திக் கடனை செலுத்தினா்.

இந்த விழாவில் கடலாடி, சாயல்குடி பகுதியை சோ்ந்தவா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com