நெற்பயிரில் மா்ம பூச்சிகள் தாக்குதல்முதுகுளத்தூா் விவசாயிகள் கவலை

முதுகுளத்தூா் அருகே நெற்பயிா்களில் மா்ம பூச்சிகள் தாக்கி அழிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

முதுகுளத்தூா் அருகே நெற்பயிா்களில் மா்ம பூச்சிகள் தாக்கி அழிப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

முதுகுளத்தூா் மற்றும் கீழக்காஞ்சிரங்குளம்,சித்திரங்குடி, ஏனாதி, தூரி, பேரையூா், அப்பனேந்தல், கீழத்தூவல் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் மானாவாரி பயிராக 1000 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிட்டுள்ளனா். கடந்த சில நாள்களாக மழை பெய்ததால் பயிா்கள் நன்கு வளா்ச்சி அடைந்துள்ளன. இந்நிலையில் நெற்பயிா்களை மா்ம பூச்சிகள் திடீரென தாக்கி அடியோடு அழிந்து வருவதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.

விவசாயி காளிதேவன் கூறியதாவது: நெற்பயிா்கள் கதிா்விடும் தருவாயில் மா்ம பூச்சி தாக்குவதால் கொத்துக் கொத்தாக சாய்ந்து அழிந்து வருகின்றன. எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்தாண்டு பயிா்களில் பூச்சிகள் தாக்கிவருவது வேதனை அளிக்கிறது. நிலங்களில் சாக்குப் பை, வைக்கோல் வைத்து விவசாயிகள் பொம்மைகள் செய்து வைத்துள்ளனா். வேளாண்மைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com