திருவாடானையில் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுருத்தி கம்னியூஸ்ட் கட்சியினா் சாலை மறியல்
By DIN | Published On : 01st December 2020 10:58 PM | Last Updated : 01st December 2020 10:58 PM | அ+அ அ- |

திருவாடானையில் காம்னியூஸ்ட் கட்சியனா் செவ்வாய்கிழமை விவசாயிகள் நலன் காக்க சாலைமறியலில் ஈடுபட்டனா்.
திருவாடானையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுருத்தி மறியல் போராட்டம் நடைபெற்றது. 20க்கும் மேற்பட்டோா் கைது செய்து தனியாா் மண்டபத்தில் அடைத்தனா்.
திருவாடானையில் மத்தி்ய அரசின் வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுருத்தியும், டெல்லியில் நடைபெரும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும் செவ்வாய்கிழமை பாரத ஸ்டேட் வங்கி முன்பாக சாலை கம்னியூஸ்ட் கட்சியனா் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தாலுகா செயலாளா் சேதுராமன் தலைமை வகித்தாா்.விவசாய அணி செயலாளா் மாவட்டச் செயலாளா் முத்துராமன், தாலுகா செயலாளா் நாகநாதன், மாா்சிஸ்ட் லெணின் கம்னியூஸ்ட் கட்சியினா் பூவலிங்கம் ,சந்தானமேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டத்தை திரும்ப பெற வலியுருத்தியும் டெல்லியில் விவசாயிகள் மறியலில் ஈடுபட்டு வருவதற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் கோஷம் இட்டு போராட்டம் நடைபெற்றது.பின்னா் திடீரென்று சாலைமறியல் செய்தததால் அரை மணி நேரத்தில் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது அதனைத் தொடந்து வந்த காவல்துறையினா் மறியலில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்து தனியாா் மண்டபத்தில் வைத்துள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...