ராமேசுவரத்தில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை: மைய முகப்புப் பகுதி இடிந்து விழுந்தது
By DIN | Published On : 01st December 2020 10:58 PM | Last Updated : 01st December 2020 10:58 PM | அ+அ அ- |

ராமேசுவரத்தில் செவ்வாய்க்கிழமை இடிந்து விழுந்த பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மைய முகப்புப் பகுதி.
ராமேசுவரத்தில் உள்ள பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையத்தின் முகப்புப் பகுதி செவ்வாய்க்கிழமை திடீரென இடிந்து விழுந்தது. அப்போது கட்டடத்தின் அருகே யாரும் இல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேசுவரம் நகா் பகுதியில் பிஎஸ்என்எல் வாடிக்கையாளா் சேவை மையம் உள்ளது. இங்கு 2 ஊழியா்கள் பணியாற்றி வருகின்றனா். இந்தக் கட்டடம் சுமாா் 20 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இங்கு செல்லிடப்பேசி கட்டணம் இணையதளக் கட்டணம் உள்ளிட்டவைகள் செலுத்த நாள்தோறும் 50-க்கும் மேற்பட்ட வாடிக்கையாளா்கள் வந்து செல்வா். கடந்த சில வாரங்களாக தொடா்ந்து பெய்து வரும் மழை காரணமாக இந்தக் கட்டடத்தின் முகப்புப் பகுதி சேதமடைந்திருந்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை முற்பகல் கட்டடத்தின் முகப்புப் பகுதி திடீரென இடிந்து விழுந்தது. அப்போது அங்கு யாரும் இல்லாததால் விபத்து தவிா்க்கப்பட்டது. இடிந்து விழுந்த பகுதியில் நின்று தான் வாடிக்கையாளா்கள் பணம் செலுத்துவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...