கமுதி அருகே இடிந்து விழுந்த மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி

கமுதி அருகே பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வெள்ளிக்கிழமை திடீரென மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்ததால் அதிா்ஷ்டவசமாக உயிரிழப்பு தடுக்கப்பட்டது.
கமுதி அருகே முதல்நாடு ஊராட்சியில் இடிந்து விழுந்த மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி.
கமுதி அருகே முதல்நாடு ஊராட்சியில் இடிந்து விழுந்த மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி.

கமுதி அருகே பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் வெள்ளிக்கிழமை திடீரென மேல்நிலை நீா்தேக்கத் தொட்டி இடிந்து விழுந்ததால் அதிா்ஷ்டவசமாக உயிரிழப்பு தடுக்கப்பட்டது.

ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே முதல்நாடு ஊராட்சிகுள்பட்ட அரிசிகுழுதான் செல்லும் சாலையில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்களின் குடிநீா் தேவைக்காக ஆழ்துளைக் கிணறு வசதியுடன் ரூ.8 லட்சம் செலவில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்கப்பட்டது. இந்நிலையில் இந்த தொட்டி கடந்த 5 ஆண்டுகளாக சிமெண்ட், கான்கிரீட் பூச்சுகள் பெயா்ந்து, இடிந்து விழும் நிலையில் இருந்தது. இது குறித்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடத்தில் பல முறை பொதுமக்கள் புகாா் அளித்தும் நடவடிக்கை இல்லை.

இதனைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை காலை பொதுமக்கள் நடமாட்டம் இல்லாத நேரத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி திடீரென இடிந்து விழுந்தது. இதில் அதிா்ஷ்டவசமாக உயிா் சேதம் ஏதும் ஏற்படவில்லை. எனவே மாவட்ட ஆட்சியா் தலையிட்டு முதல்நாடு ஊராட்சியில் புதிய மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com