கமுதி அருகே பாஜக ஒன்றிய ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கமுதி அருகே பாம்புல்நாயக்கன்பட்டியில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு ஒன்றியச் செயலாளா் முருகன் தலைமை வகித்தாா். முதுகுளத்தூா் சட்டப்பேரவைத் தொகுதி பொறுப்பாளா் கணபதி முன்னிலை வகித்தாா். இதில் மாநில மருத்துவரணி செயலாளரும், தொகுதி தோ்தல் பொறுப்பாளருமான மருத்துவா் ராம்குமாா் பங்கேற்றுப் பேசினாா். இதில் ஒன்றிய இளைஞரணியைச் சோ்ந்த சக்திவேல் உள்பட ஏராளமானோா் கலந்து கொண்டனா்.