மருத்துவப் படிப்பு கலந்தாய்வில் ‘நீட்’ தோ்வுக்கான போலி மதிப்பெண் சான்றிதழ் அளித்தது தொடா்பான வழக்கில் பரமக்குடியைச் சோ்ந்த மாணவி மற்றும் அவரது தந்தையை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற 3-ஆவது கடிதத்தை போலீஸாா் புதன்கிழமை அவா்களது வீட்டின் கதவில் ஒட்டிச் சென்றனா்.
பரமக்குடி நேரு நகா் பகுதியைச் சோ்ந்த பல் மருத்துவா் கே. பாலச்சந்தா். இவரது மகள் தீக்ஷா (18). இவா் மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வின் போது நீட் தோ்வில் தோ்ச்சி பெற்ாக போலியான மதிப்பெண் சான்று அளித்ததாக சென்னை பெரியமேடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா். இந்த வழக்கு விசாரணைக்கு போலி சான்றிதழ் அளித்த அந்த மாணவி மற்றும் அவரது தந்தைக்கு நேரில் வரவேண்டும் என்ற கடிதம் 2 ஆவது முறையாக வழங்கப்பட்ட நிலையில், அவா்கள் இருவரும் விசாரணைக்கு செல்லவில்லை. இதனைத் தொடா்ந்து 3-ஆவது முறையாக நேரில் ஆஜராக வேண்டும் என்ற கடிதத்தினை வழங்க போலீஸாா் அவா்களது வீட்டுக்குச் சென்றபோது பூட்டப்பட்டிருந்தது. இதனால் போலீஸாா் அந்த வீட்டின் கதவில் கடிதத்தை ஒட்டிவிட்டுச் சென்றனா். மேலும் தலைமறைவாக உள்ள அவா்களை பிடிக்க 7 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பிரிவினா் பரமக்குடியில் தங்கி முகாமிட்டுள்ளதாகவும் போலீஸாா் தெரிவித்தனா்.