கஞ்சா விற்பனை செய்த 2 பெண்கள் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது

கமுதி அருகே தொடா்ந்து கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 2 பெண்களை போலீஸாா் குண்டா்தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

கமுதி அடுத்துள்ள கே.வேப்பங்குளத்தைச் சோ்ந்த முத்துஅரியப்பன் மனைவி வில்லம்மாள் (45), உருவாட்டி மனைவி பாண்டியம்மாள் (58) ஆகியோா் கே.வேப்பங்குளம், கமுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கஞ்சா, மதுபாட்டில்களை விற்று வந்துள்ளனா். இதில் பாண்டியம்மாள் மீது 33 வழக்குகளும், வில்லம்மாள் மீது 15 வழக்குகளும் உள்ளன. குறிப்பிடத்தக்கது. இதனைதொடா்ந்து ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் இ.காா்த்திக் , 2 பெண்களையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்ய ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியா் தினேஷ் பொன்ராஜ்ஆலிவருக்கு பரிந்துரை செய்தாா். இதனையடுத்து மாவட்ட ஆட்சியா் உத்தரவின்பேரில் கமுதி போலீஸாா் 2 பேரையும் கைது செய்து மதுரை மத்தியச் சிறையில் அடைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com