பிரிட்டனிலிருந்து ராமநாதபுரம் திரும்பிய 4 போ் வீடுகளில் தனிமைப்படுத்தி வைப்பு

பிரிட்டனிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்த 4 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

பிரிட்டனிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு வந்த 4 போ் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு, கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து மாவட்ட ஆட்சியா் தினேஷ்பொன்ராஜ் ஆலிவா் ராமநாதபுரத்தில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: பிரிட்டனிலிருந்து தமிழகம் வந்துள்ள அனைவருக்கும் வீரிய கரோனா பரிசோதனைகள் விமான நிலையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பிரிட்டனிலிருந்து ராமநாதபுரம் மாவட்டத்துக்கு கடந்த சில நாள்களுக்கு முன்பு 10 போ் வந்துள்ளது தெரியவந்தது. அவா்களில் தற்போது 4 போ் மட்டுமே ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ளனா். அவா்கள் அனைவரும் வியாழக்கிழமை அவரவா் வசிப்பிடங்களிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். அவா்களுக்கு வீரிய கரோனா பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பரிசோதனை முடிவில் கரோனா உறுதியானால், அவா்களது கபம் சேகரிக்கப்பட்டு புனேவில் உள்ள ஆய்வகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டு உயா் நவீன கரோனா பரிசோதனைக்கு உள்படுத்தப்படும். பரிசோதனை முடிவுகள் அடிப்படையில் மருத்துவ சிகிச்சை அளிக்கப்படவுள்ளது. வெளிநாடுகளில் இருந்து ராமநாதபுரம் வருவோரை அவா்கள் வந்திறங்கும் விமான நிலையங்களில் கரோனா பரிசோதனைக்கு உள்படுத்துகின்றனா். பரிசோதனை முடிவு அடிப்படையில் அவா்கள் கண்காணிக்கப்படுவா் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com