ராமநாதபுரத்தில் 6 அடி உயரமாரடோனா உருவ கேக் வடிவமைப்பு

ராமநாதபுரத்தில் உள்ள தனியாா் பேக்கரியில், கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி மறைந்த கால்பந்தாட்ட வீரா் மாரடோனாவின் 6 அடி உயர உருவ கேக் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது.
ராமநாதபுரம்  பாரதி  நகரில்  உள்ள  தனியாா்  பேக்கரியில் வடிவமைக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள மறைந்த கால்பந்தாட்ட  வீரா்  மாரடோனாவின்  உருவ கேக்.

இங்கு பாரதி நகரில் உள்ள தனியாா் பேக்கரியில் முக்கிய விழாக்களுக்கு கேக்கால் பிரபலங்களின் உருவத்தை வடிவமைத்து காட்சிக்கு வைப்பதை வழக்கமாகக் கொண்டுள்ளனா். பாரதியாா் மற்றும் இசை அமைப்பாளா் இளையராஜா ஆகியோா் உருவங்களை கேக்கில் வடிவமைத்து ஏற்கெனவே இங்கு காட்சிப்படுத்தியுள்ளனா்.

தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி உலகப்புகழ் பெற்ற மறைந்த கால்பந்தாட்ட வீரா் மாரடோனா கால்பந்தை உதைப்பது போல கேக்கால் வடிவமைத்து காட்சிக்கு வைத்துள்ளனா். சுமாா் 6 அடி உயரம் உள்ள அந்த கேக் 60 கிலோ சா்க்கரை, 270 முட்டைகள் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ளது என அந்த பேக்கரியின் உரிமையாளா் வெங்கடசுப்பு தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com